
யுவ சன்ஸ்கிருதி (Yuva Sanskriti)
ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கல்வியியல் கல்லூரியின் 75 ஆம் ஆண்டு பவள விழாவை முன்னிட்டு மாநில அளவிலான கல்வியியல் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு யுவா சன்ஸ்க்ரிதி என்ற மூன்று நாள் பாரத கலாச்சார மற்றும் பாரம்பரிய மேம்பாட்டு இளைஞர் முகாம் கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை வித்யாலயா வளாகத்தில் உள்ள ஜி.கே.டி கலையரங்கத்தில் நடைபெற்றது.
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கல்வி நிறுவனங்களின் செயலர் தவத்திரு சுவாமி கரிஸ்டானந்தர் அவர்கள் தலைமை வகித்தார். தவத்திரு சுவாமிஜி தத்பஷானந்தர் அவர்கள் உதவி செயலர் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம், கோவை அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி துவக்கி வைத்தார்கள். கல்லூரி முதல்வர் முனைவர் வே. ஸ்ரீனிவாசன் அவர்கள் வரவேற்புரை கூறினார்.
முகாமில் சாரதா கல்வியியல் கல்லூரி, சேலம், வித்யா மந்திர் கல்வியியல் கல்லூரி, ராசிபுரம், கொங்கு நாடு ஒருங்கிணைந்த கல்வியியல் கல்லூரி, நாமக்கல், வெள்ளாளர் மகளிர் கல்வியியல் கல்லூரி, ஈரோடு, ஹிந்துஸ்தான் கல்வியியல் கல்லூரி, கோவை போன்ற கல்லூரிகளில் இருந்து சுமார் 160 மாணவ மாணவிகள் முகாமில் பங்கு பெற்றனர்.
முகாமில் நல்ல சமுதாயத்தை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு, நவீன கற்பித்தல் முறைகள், இளைஞர்களுக்கு சுவாமி விவேகானந்தர், இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு, தமிழ் இலக்கியங்களில் கல்வி சிந்தனை, பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஒரு தனித்துவமான ஆசிரியர், நேர்மறை சிந்தனைகள், சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு, மற்றும் ராமாயணம் மற்றும் மகாபாரதம் கூறும் வாழ்வியல் நெறிமுறைகள், யோகா பயிற்சிகள் மற்றும் மதிப்பு கல்வியோடு இணைந்த விளையாட்டுக்கள் போன்ற கருத்துக்கள் வெவ்வேறு கருத்தாளர்களால் கற்பிக்கப்பட்டன.
முகாமில் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு தனித்தனியே தங்கும்வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. மேலும் முகாமின் முக்கிய நிகழ்வாக இன்றைய காலகட்டத்திற்கு தேவைப்படுவது பாரம்பரிய விழுமியங்களா? நவீன விழுமியங்களா? என்ற தலைப்பில் மாணவர்களே பட்டிமன்றம் நிகழ்தினார்கள். மேலும் புதுமையான கற்பித்தல் முறைகள் என்ற தலைப்பில் போட்டிகளும் நடத்தப்பட்டன.
ஜனவரி மாதம் 31 ஆம் தேதி மதியம் 2.30 மணி அளவில் முகாமின் நிறைவு விழா நடைபெற்றது. விழாவில் தவத்திரு சுவாமி ஹரிவ்ரதானந்தர், அவர்கள், செயலர், தி.அ.தி கலாநிலையம் நடுநிலைப்பள்ளி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பித்தார்கள். நிறைவாக முனைவர். சு. சிவசங்கர், முகாம் ஒருங்கிணைப்பாளர் நன்றியுரை கூற முகாம் இனிதே நிறைவடைந்தது.
You may also like
Basic Trauma & Emergency Life Support Training
Educational Load and Scholarship





















