ஒவ்வொரு மனிதனுக்குள் புதைந்திருக்கும் பரிபூரண தன்மையை வெளிக்கொணர்வது தான் கல்வி, உனக்குள் எல்லை இல்லா ஆற்றல் இருக்கிறது உன்னால் எதையும் சாதிக்க முடியும் என்று வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் சிந்தனையை முதன்மையாகக் கொண்டு ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கல்வியியல் கல்லூரி (தன்னாட்சி) இளைஞர்களுக்க (B. Ed., & M. Ed.,மாணவ ஆசிரியர்களுக்கு மட்டும்) தேவையான கலாச்சாரம், பண்பாடு, நற்பண்புகள், நல்ல மாணவர்களை உருவாக்குவதில் ஆசிரியரின் பங்குகள், புதுமையான கற்பித்தல் முறைகள் போன்றவற்றை மேம்படுத்தும் யுவ சன்ஸ்கிருதி (பாரத கலாச்சார மற்றும் பாரம்பரிய மேம்பாட்டு இளைஞர் முகாம் என்ற மூன்று நாட்கள் முகாம் 05.12.2024 வியாழக்கிழமை முதல் 07.12.2024 சனிக்கிழமை வரை நடத்த உள்ளது.