கோவை ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் ஒவ்வொரு வருடமும் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் பிறந்த நாளை முன்னிட்டு ஜனவரி முதல் ஞாயிற்றுக்கிழமை (05.01.2025) குரு பூஜை விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் ஒரு நிகழ்வாக மாவட்ட அளவிலான குழந்தைகளுக்கான ஓவியப்போட்டியை ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கல்வியியல் கல்லூரியின் நடத்தி வருகிறது. இதில் வகுப்பு 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகளும், கல்லூரி அளவிலான மாணவ மாணவிகளும் மற்றும் மன வளர்ச்சி குறைபாடு உள்ள மாணவ மாணவிகள் என பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் 28.11.2024 மற்றும் 29.11.2024 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது.